தேவை வெள்ளை அறிக்கை!-டாக்டர் ராமதாஸ்

திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:10 IST)
பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவரும், மருத்துவருமான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தேவை  வெள்ளை அறிக்கை!
31% பொதுப்போட்டி பிரிவின்
பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.

இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்