பெண் பத்திரிக்கையாளர், கவிஞர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட சந்தியா மேனன் என்பவர் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனக்கு அப்போது வயது 18. பாடல் வரிகளை எழுதுவது தொடர்பாக அவரிடம் பயிற்சி எடுக்க சென்றிருந்தேன். அதுபற்றி விவரிப்பதாக கூறி என் அருகே வந்த அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அதன்பின் பயிற்சி பெறும் குழுக்களில் ஒருவராக நான் இருந்தேன். அவருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் அவரை பற்றி பேச அனைவரும் தயங்குகின்றனர். அதை பயன்படுத்தி தன்னை பற்றிய விவரங்கள் வெளியே வராமல் அவர் பார்த்துக்கொள்கிறார். எனக்கும் அது நடந்தது. இது உண்மை” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வைரமுத்து பற்றி தான் பேச தொடங்கியதால், தன்னைப் போல் பாதிக்கப்பட்ட வேறுஒரு பெண்ணும் சில உண்மைகளை கூறியிருக்கிறார் எனக்கூறி அப்பெண்ணின் டிவிட்டை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் அவரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. அதில் அப்பெண் கூறியிருப்பதாவது:
உங்களைப் போலவே நானும் பாதிக்கப்பட்டேன். வைரமுத்து ஒரு விலங்கு. எனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும் போது என் எழுத்தை பார்த்து விட்டு என்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்தார். அவர் மூத்த எழுத்தாளர் என்பதால், அவரை என் தாத்தா எனக் கருதியே சென்றேன். ஆனால், அவரின் அறைக்குள் நான் நுழைந்ததும் கதவை சாத்திய அவர் பின்னால் இருந்து என்னை தொட்டார். உடனே அவரிடமிருந்து நழுவி நான் ஓடி விட்டேன்.
அதன் பின் என்னை தொடர்பு கொண்ட அவர், நடந்தது பற்றி அவரின் மனைவியிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ஏனெனில், என் குடும்பத்தினருக்கு வைரமுத்துவின் மனைவி பொன்மணி பழக்கமானவராக இருந்தார். தற்போது, அவரை பற்றி நீங்கள் பேசுவதால், நானும் தைரியமாக பேச முன் வந்துள்ளேன்” என அந்த பெண் தெரிவித்துள்ளார்.