சாலையில் விழுந்த ராட்சத பாறை... அகற்றும் பணி தீவிரம்

ஞாயிறு, 22 மே 2022 (00:18 IST)
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ராட்சத பாறையை பொக்லைன் வாகனம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
 
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலைப் பாதைகளில் ஆங்காங்கே கடந்த சில தினங்களுக்கு முன்பு  10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இன்று ஏற்காடு மலைப்பாதை 18 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த ஏற்காடு காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ராட்சத பாறை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக பாறை உருண்டு விழுகின்ற பொழுது வாகன ஓட்டிகள் வராததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.மேலும் பாறை அகற்றபடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது மலைப்பாதையில் திடீரென சுருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்