வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூடுக! - சீமான்

திங்கள், 27 ஜனவரி 2020 (20:28 IST)
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.  இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வட மாநிலத்தவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன் மானத்தை உரசிப்பார்ப்பதா ? வடநாட்டவர்களை வெளியேற்று சுங்கச் சாவடிகளை மூடுக என தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையை வாக்குவாதத்தில் முடிந்து அதன் பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பேருந்தின் ஓட்டுனர் சுங்கச்சாவடிக்கு குறுக்கே பேருந்தை நிறுத்தி, வேறு எந்த வாகனமும் அந்த சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் செய்தார்.
 
இதனால் நீண்ட வரிசையில் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் காத்திருந்தன. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் திடீரென வன்முறையில் இறங்கி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதால் அடுத் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இது குறித்து சீமான் தனது அறிக்கையில், தமிழகத்திற்குப் பிழைப்பிற்கு வந்தவர்கள் தமிழக மண்ணின் மக்களைத் தாக்குகிறார்களென்றால், இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்ல முடியாது.
 
தமிழர்கள் மீதான வடநாட்டவர்களின் வன்முறையும், அடக்குமுறையும் இனியொரு முறை நிகழ்ந்தால் தமிழர் நிலம் வேறு மாதிரியான பின் விளைவுகளைத் தரும் என எச்சரிக்கிறேன்.ஆகவே, முதற்கட்டமாகச் சுங்கச்சாவடி‌ பணிகளுக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இது தொடருமேயானால், செங்கல்பட்டில் நடந்ததைப்போல் மக்கள் புரட்சி மூலம் சுங்கச்சாவடிகள் யாவும் மூடப்படும் என எச்சரிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
 

வடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா? வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூடுக! - சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/ri4oRzTsW6

— சீமான் (@SeemanOfficial) January 27, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்