பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த பேசுங்கள்: காயத்ரி ரகுராம்

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (10:02 IST)
வள்ளுவருக்கு காவி சாயம் பூசி விட்டதாக திமுக உள்பட ஒரு சில திராவிட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் வள்ளுவருக்கு காவி சாயம் பூசியது குறித்து பேசுவதற்கு முன் பெரியார் குறித்த போலி செய்திகளுக்கு விளக்கம் அளித்து விட்டு அதன் பிறகு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வாருங்கள் என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வான் புகழ் வள்ளுவனுக்கு குடுமி வைத்துவிட்டார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் ஸ்டாலினே, இல்லாத யுனெஸ்கோ விருதை பெரியார் பெற்றதாக பாட திட்டத்தில் வைத்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவலை திணித்ததற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்
 
5முறை ஆட்சியில் இருந்தபோது தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் தான் என வரலாற்றை திரித்து சித்தரித்த திருட்டு  திராவிட கும்பல் முதலில் பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்’ என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்