காயத்ரி ரகுராம் ஆபாசமாக சித்தரித்து வீடியோ: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (21:58 IST)
பாஜக நிர்வாகி மற்றும் நடிகை காயத்ரி ரகுராமன் ஆபாச வீடியோ இணையதளத்தில் பரப்பப்பட்டு வருவதாகவும் இதனை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் சென்ற பெண்கள் சிலர் கீழே விழுந்து விட்ட நிலையில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு காயத்ரி ரகுராமன் முயற்சித்தார்.
 
இந்த வீடியோவை ஆபாசமாக சித்தரித்து திமுகவைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருவதாகவும் அந்த வீடியோவை நீக்குவதோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலத்தில் காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்