அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் பாதிக்கப்படுவது பிராமணர்கள் இல்லை: காயத்ரி ரகுராம்

ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:56 IST)
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திமுக அரசின் திட்டத்தால் பாதிக்கப்படுவது பிராமணர்கள் மட்டும் இல்லை என்றும் அனைத்து இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத் தலைவர் D.முத்துசுவாமி சிவாச்சாரியார், அவர்கள் என்னை நேரில் சந்தித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது  எவ்வளவு தவறு  என்பதைப்பற்றி விளக்கி அவரது ஆதங்கத்தையும், கருத்துக்களையும் கூறினார். அதுமட்டுமின்றி ஆதரவாளர்கள் பட்டியலையும் கொடுத்தார். 
 
அனைத்து கோவில்களிலும் பிராமணர்கள்தான் பூஜை செய்கிறார்கள் என்று நாம் அனைவரும் தவறாக  புரிந்து கொண்டுள்ளோம். நூற்றுக்கணக்கான அரசாங்க  கோவில்களில்  வெவ்வேறு சமூகத்தை   சார்ந்தவர்கள்  பூஜை செய்து வருகின்றனர்.
 
உதாரணத்திற்கு 1.சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோவில் (உடையார்)            2.மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் (மீனவ சமுதாயம் )             3.பெரியநாயகி அம்மன் திருக்கோவில் தேவர்கண்டநல்லூர், குளக்கரை திருவாரூர்(இசை வேளாளர் நாதஸ்வரம்) 4.பாடிகாட் முனீஸ்வரன் திருக்கோவில் சென்னை (தலித்)  என்று பல கோவில்கள் உள்ளன. இதில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது என்னவென்றால் இதனால் பாதிக்கப்படுவது பிராமணர்கள் மட்டுமல்ல, அனைத்து இந்துக்களும் தான். 
 
காலங்காலமாக மூலவர் சன்னதியில் பூஜை செய்து வந்தவர்களை உங்களுக்கு ஓய்வு வயது 58 ஆகிவிட்டது, ஆகையால் பிரகார கடவுளுக்கு பூஜை செய்யுங்கள் என்று மாற்றி விடுவது எவ்வளவு தவறான செயல். ஆகம விதியை மீறி அர்ச்சகர்களை திமுகவினர்  மாற்றியது மிகப்பெரிய தவறு .திமுகவினர் பெரியாரின் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று  மக்களின் உணர்வுகளில்  விளையாடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்
 
இவ்வாறு நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்