ஈரோடு தொகுதியில் அண்ணாமலையை எதிர்த்து போட்டி.. காயத்ரி ரகுராம் சவால்

ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:19 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட தயார் என நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சமீபத்தில் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்