சென்னையின் முக்கிய சாலைகளின் ரூட் மாற்றம்: லிட்ஸ் உள்ளே...

ஞாயிறு, 11 நவம்பர் 2018 (10:29 IST)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள 3 ஆம் டி20 போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சென்னை போக்குவரத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் போட்டி இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது. எனவே, இன்று இரவு 9.30 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் செயல்படும். 
 
1. பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை சந்திப்பிலிருந்து நோ என்ட்ரி ஆகவும், வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து என்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும். 
 
2. காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
 
3. கெனால் ரோடு சாலை பாரதி சாலையிலிருந்து ஒரு வழிபாதையாகவும் வாலாஜா சாலையிலிருந்து நோ என்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும்.
 
4. அண்ணா சாலையிலிருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.
 
5. B மற்றும் R ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.
 
6. போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் எம், பி, டி, டபிள்யூ ஆகிய எழுத்துகள் கொண்ட வாகனங்கள், எம்டிசி ஆகியவை பாரதி சாலை வழியாக கெனால் ரோடுக்கு சென்று வாகன நிறுத்தங்களுக்குச் சென்றடையலாம்
 
7. அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும் பிடபிள்யூடி எதிராக உள்ள கடற்கரை உட்புற சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்