கஜா புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில் கஜா புயலின் எதிரொலியாக தற்பொழுது சென்னையில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், திநகர், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புற நகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.