தமிழகத்தில் மேலும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சனி, 19 ஜூன் 2021 (20:24 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 8,183  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 8,183  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24, 14,680  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 18,232   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23,04,885   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 180  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 468  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  5,28,768   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 1,65, 102  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்