காலை 5.30 முதல் இரவு 10 வரை வகுப்புகள்... இன்று துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்!

சனி, 19 ஜூன் 2021 (10:42 IST)
தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது என அறிவிப்பு.  

 
கொரோன காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. தற்போதும் அப்படியே தொடர்கிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் கூட கொரோனா இரண்டாம் அலை பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன. 
 
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து முதல்வர் தொடங்கி வைக்கிறார். 
 
தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது. மேலும், விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்