இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் மதுரை மற்றும் ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என்பதும், அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மதுரையில் 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மதுரையில் இதுவரை 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது