மத்திய அரசின் கொள்கை திட்டமான ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேசம், ஒரே நாடு ஒரே ரேஷன் ஆகியவைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது
இதன் மூலம் பிற மாநிலத்தில் உள்ளவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷனில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை கருவி பொருத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணியில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது