கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது. ஆனால், சென்னையில் லோகல் டிரைன் (புறநகர் ரயில் சேவை ) இல்லாதது பெரும் கவலையாக இருந்து வருகிறது.