கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 20 முதல் அதாவது நாளை முதல் தொடங்குகிறது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 38 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழி விண்ணப்பம் தொடங்க உள்ள நிலையில் 38 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 20 முதல் www.tngasa.in- என்ற இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு தொடங்க உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இம்மாதம் 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர பதிவு செய்யலாம் என்றும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வழங்க கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளை பொருத்தவரை, அரசின் இணையதளங்களில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மொத்தம் அரசு கட்டுப்பாட்டில் 109 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 139 அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் இயங்குகிறது என்பதும், 571 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது