தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் சோதனை நடைபெறும். அதன் பிறகு இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நான் செய்த மிகப் பெரிய பணி இதுவே. என்னை இப்பணியில் ஈடுபடுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமீத் ஷா, அரசு அதிகாரியாக இருந்த என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த என் ஆசான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கும், இந்தக் குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் என் நன்றிகள்