இன்று முதல் கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

புதன், 1 டிசம்பர் 2021 (07:56 IST)
கடந்த பல மாதங்களாக கேரளாவிற்கு பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில் இன்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
நேற்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதேநேரத்தில் கேரளாவிற்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்
 
இதனை அடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பல மாதங்களாக செல்லாமல் இருந்த பேருந்து போக்குவரத்து இன்று காலை தொடங்கி உள்ளது. இதனை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் என்று இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப்பின் கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்