மே 20 முதல் 18 வயது மேலானவர்களுக்கும் தடுப்பூசி: மா சுப்பிரமணியன் தகவல்!

செவ்வாய், 18 மே 2021 (18:33 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது
 
மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி எப்போது முதல் போடப்படும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
மே 20ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பார் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து மே 20 முதல் 18 வயதுக்கு மேலான அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்