சீர்காழியில் மணமக்களுக்கு பெட்ரோல் 'கிஃப்ட்' வழங்கிய நண்பர்கள்!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:15 IST)
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல் பரிசாக வழங்கினர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெய்யழகன் மற்றும் துர்க்கா தம்பதிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்,ஆனால், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை  குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கினர். 
 
தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்தாக நண்பர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்