கரூர் மாவட்டத்தில் கரூர் நகரத்திற்குட்பட்ட வெங்கமேடு செங்குந்தர் தெரு, பழனியப்பா நகர் ஆகிய பகுதிகளில், முதல்வரின் சிறப்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,. காவிரி ஆற்றில் 500 கோடி செலவில் காவிரியை போல, புஞ்சை புகளூர் பகுதியில், தடுப்பணைகள் கட்டலாம், அப்போது கரூரில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் இது மட்டுமில்லாமல், நெரூர், குளித்தலை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட முன்கட்ட ஆய்வு பணிகளுக்காகவும் நடவடிக்கைக்காக ரூ 50 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளார்.
இதெல்லாம் எதற்காக என்றால், பெண்கள் நிறைய பேர் உள்ளதால் இதை கூறுகின்றேன் என்றதோடு, இலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார்.
ஆகவே அவர் இன்று நம்மிடம் இல்லாவிட்டாலும் அவர் விட்டு சென்ற அனைத்து திட்டங்களும் நம்மிடையே நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழியாக வருகின்றது என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோரிடம் மனுக்கள் பெற்று, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிரவாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.