காட்டுக்குள் வேட்டையாட சென்றவரை சுட்டுக்கொன்ர வனத்துறையினர்.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
தேனி அருகே காட்டுக்குள் வேட்டையாட சென்றவரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் வெட்டுக்காடு என்ற வனப்பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வேட்டையாட சென்றதாகவும் அவரை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

வேட்டையாட சென்ற ஈஸ்வரன் என்பவர் வனத்துறை ஊழியர்களை தாக்க முயற்சி செய்ததாகவும் அவர் அரிவாளால் தாக்க வந்ததை அடுத்து வனத்துறையினர் தற்காப்புக்காக அவரை சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட ஈஸ்வரன் என்பவரின் சடலம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  

கூடலூர் வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் ஈஸ்வரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்