கமலை சந்தித்த போர்டு நிறுவன ஊழியர்கள் - பின்னணி என்ன?

வியாழன், 28 அக்டோபர் 2021 (09:00 IST)
போர்டு நிறுவன ஊழியர்கள் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். 

 
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் உள்ளது. போர்டு இந்தியா நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு காரணமாக சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் சாமன்ட் நகர் ஆலைகளை மூடுவதாக அண்மையில் அறிவித்தது. 
 
இந்நிலையில் பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து குரல்கொடுத்தார். எனவே இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  போர்டு நிறுவன பணியாளர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்ததனர். கமல்ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்