இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராகப் போராட தயாராகும் ஜெயங்கொண்டம்

சனி, 4 மார்ச் 2017 (19:36 IST)
நெடுவாசலில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் குழாயில் புகை கசிந்ததால் அங்கும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 17 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஈடுப்பட்டுள்ளனர்.
 
பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் ஹைட்ரோ கார்பன திட்டம் பாதுக்காப்பனது என மத்திய அரசுக்கு ஆதரவாக குறல் கொடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியிலும் போராட்டம் வெடிக்கும் சூழல் தற்போது உருவாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்