மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசு நிதி ஒதுக்கியும், மீன்வளத்துறை முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனக்கூறி பழவேற்காடு 40 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மிக்ஜாம் புயலால் பழவேற்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த 40 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடி வலைகள், படகுகள், என்ஜின்கள் என பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணம் வழங்க பழவேற்காடு சுற்றுவட்டார 40 மீனவ கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மீன்வளத்துறையினர், மீனவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், நிவாரண தொகை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி பழவேற்காடு பகுதியை சேர்ந்த 40 மீனவ கிராம மக்கள் கடலுக்கும், பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடிக்க செல்லவில்லை.