முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு முதல் வகுப்பு சிறை: நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (18:34 IST)
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கைதானவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, தனக்கு சிறையில் முதல் வகுப்பு அறை கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் லஞ்ச வழக்கில் கைதான துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் செய்துதர கோவை ஆட்சியர் பரிந்துரைக்குமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்