தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகக் கவசம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு, வீரர்களுக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை மாநகர காவல் ஆணையர்கள் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். 3 மணிநேரத்திற்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க வீரர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி கூறியுள்ளார்.