மேலும் இந்நிகழ்ச்சியில் பாங்க் ஆப் பரோடாவின் முதன்மை மேலாளர் வி. ஸ்ரீ ஹரி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்ததோடு, அவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கினார். வங்கியின் மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய வங்கியின் கரூர் கிளை துணை மேலாளர் மு.லெனின்., படிக்கும் காலத்தில் சேமிப்பு மிக முக்கியமானது என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ஒய்வு பெற்ற சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு. வங்கிகளின் முக்கியதுவத்தை பற்றி பேசினார். மேலும் வங்கி அதிகாரிகள்.. மாணவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் சலுகைகள் பற்றியும் எடுத்துக்கூறினர். மேலும் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
மேலும் மாணவர்களின் வங்கி குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இறுதியில் மாணவ மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட அளவில் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கியில் சேமிப்பு குறித்து விளக்கவுரையாற்றிய நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.