எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீடு..! விவரங்கள் இன்று வெளியீடு..!!

Senthil Velan

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:27 IST)
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் இன்று வெளியாகிறது.
 
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ம்தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியாக பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
 
இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா.! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்..!!


அதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7 ஆயிரத்து 628 மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,806 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்