தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து மேலும் பேசியுள்ளதாவது, அதிமுக அரசு 4.85 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக தவறாக கூறியிருக்கிறது. 5 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் மோசமாக நிதிநிலை இருக்கிறது.
நாங்கள் 10 வருடத்திற்கு பிறகு தற்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஒரு வருடத்தில் உற்பத்தியில் மூன்றரை சதவீதம் வருமானத்தை இழந்துவிட்டோம். வருவாயில் 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை முதலில் திருத்த வேண்டும். நிறைய தவறு நடக்கிறது. அடிப்படையில் கடந்த 5 வருடங்களாக சரியான தலைமை இல்லாததால் வருவாய் குறைந்துள்ளது. தவறுகளை திருத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.