மகளிர் காங்கிரஸ் அணி தலைவியாக இருந்த விஜயதாரணி கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டு, ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவிக்கு பலரும் போராடி வருகின்றனர். அதில் ஒருவர் நக்மா அணியை சேர்ந்த ஹசீனா. இன்று சத்யமூர்த்தி பவனில் மகளிர் அணி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஹசீனா ஆதரவாளர்கள் ஜான்சிராணியை கடுமையான வார்த்தைகள் கொண்டு திட்டியுள்ளனர். இது ஜான்சிராணிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜான்சிராணியும் பதிலுக்கு பேசியுள்ளார். இதையடுத்து இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார். ஆண்களும் சிலர் புகுந்து தாக்குதலில் ஈடுப்பட்டனர்.