பேட்டரி வெடித்து தந்தை - மகள் பலி!

சனி, 26 மார்ச் 2022 (09:33 IST)
வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தை - மகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
நள்ளிரவில் பைக்கிற்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய போது பேட்டரி வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்த தந்தை துரைவர்மா மற்றும் அவளது மகள் மோகன பிரீத்தி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கழிவறையில் இருந்து தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்