ஈஷா சிலை முன்பு கிறிஸ்துவ பிரச்சாரம் – பாதிரியார் செயலால் பரபரப்பு !

புதன், 29 மே 2019 (10:49 IST)
கோவையில் ஈஷா மையத்தின் ஆதியோகி சிலை முன்பு பாதிரியார் ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாக பணிபுரியு இவர் கோவையில் உள்ள ஈஷா மையத்துக்கு சென்ற இவர் அங்கு ஆதியோகி சிலை முன்பு இந்த சிலையும் பாம்பும் உங்களை என்றுமே உங்களைக் காப்பாற்றாது எனக் கூறினார்.

இதனால் அங்கு வந்திருந்த மக்கள் குழப்பமடைந்தனர். பாதிரியாரின் இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்