மீண்டும் ஒரு தீக்குளிப்பு முயற்சி! ஆனால் இம்முறை கடன் கொடுத்தவர்?

சனி, 28 அக்டோபர் 2017 (16:48 IST)
கந்துவட்டி கொடுமையால் சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீளவில்லை இந்த நிலையில் கோவையில் ஒருவர் தனது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
 
கோவையை அடுத்த கருமத்தன்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவர் தனது நண்பர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டியும் முதலும் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து குமார் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
 
இந்த நிலையில் தனது மகனுடன் இன்று கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த குமார், காவல்துறை கண்காணிப்பாளர் இல்லாததால் அங்குள்ள வேறு ஒரு அதிகாரியிடம் புகாரை அளித்துவிட்டு பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது மீதும் தனது மகன் மீதும் தீயை பற்ற வைக்க முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் சுதாரிப்பாக உடனே அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் கோவை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்