இறந்தவர் போல் நடித்து யானையிடம் இருந்து தப்பித்த விவசாயி
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:19 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானையிடம் இருந்து தப்பிக்க விவசாயி ஒருவர் இறந்தவர் போல் நடித்து உயிர் தப்பினார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியை அடுத்த காப்புக்காடு குன்றி மலை கிராமத்தை சேர்ந்த சித்தையா அவர் வளர்த்து வரும் மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் வனப்பகுதிக்கு சென்று மூலிகை செடி எடுக்கச் சென்றுள்ளார்.
அங்கு காட்டில் யானை ஒன்று குட்டையில் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது. இவரை கண்டதும் யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. அதில் 10அடி தூரம் போய் விழுந்துள்ளார்.
அந்த யானை மீண்டும் அவரை தாக்க ஓடி வந்துள்ளது. இதை கண்ட அவர் இறந்தவர் போல் நடித்துள்ளார். அருகே வந்த யானை காலால் புரட்டி பார்த்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
யானை வெகு தூரம் சென்றவுடன் அவர் சென்றுள்ளார். யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த சித்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.