மக்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த பூமியில் மனித உருவில் வந்த கடவுள் என்று சொல்லியபடி, பேச முடியாவர்களை பேச வைப்பதாகவும், நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதாகவும், நாடகமாடி வந்த செஞ்சி சந்தோஷ்குமார் என்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் தன்னை மகாவிஷ்ணு என்று, தன் இரு மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது.