மெட்ரோ ரயில்நிலையத்தில் தீயா ? – தவறான அறிவிப்பால் பதற்றம் !

செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (10:45 IST)
மெட்ரோ ரயில் சேவை இரண்டாவது நாளாக இன்றும் பதற்றமான சூழலில் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களில் எட்டு பேர், நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் சங்கம் ஆரம்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேர் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் செய்ததால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அனுபவம் இல்லாதவர்களைக் கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இரண்டாவது நாளாக இன்று மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பரவியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் அது போல தீ எதுவும் பரவவில்லை. தீப்பரவுவதாக பிழையானத் தகவல் பரப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் நேற்றைத் தொடர்ந்து இன்றும் மெட்ரோ ரயில்நிலையங்களில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்