கன்ஃபார்மான தேமுதிக - அதிமுக கூட்டணி? பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்

புதன், 6 மார்ச் 2019 (13:46 IST)
தேமுதிக அதிமுக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக சார்பில் நடைபெற பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம்பெற்றுள்ளது.



 
 
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்டது.
 
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இன்று அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருக்க்கும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தின் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் படமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி என்று தான் தெரிகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்