பழநி சாலையில் குவிந்து கிடக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள்! – பொதுமக்கள் பதற்றம்!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (15:10 IST)
பழநி பிரதான சாலையில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகளை சிலர் குவியலாக போட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழநி அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், சுற்றுலாதளமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் பழநியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவுபொருள் சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது பழநி – திண்டுக்கல் பிரதான சாலையில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இவற்றை கொட்டியது என்பது தெரியாத நிலையில் காலாவதியான இந்த பொருட்களை சிலர் திரும்ப எடுத்து விற்பனை செய்யவோ, தெரு விலங்குகள் சாப்பிடவோ கூடிய அபாயம் உள்ளதால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்