ரயில்வே தேர்வுகளுக்காக தெலுங்கானா சென்ற தமிழக இளைஞர்கள் கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்வேயில் லோகோ பைலட் காலி பணியிடங்களுக்கான சிபிடி-2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும் பல இளைஞர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தெலுங்கானாவில் ஒதுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படாததால் தமிழக இளைஞர்கள் தேர்வு எழுதுவதற்காக தெலுங்கானாவுக்கே சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வு எழுத சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏற்பட்டுள்ளதுடன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Edit by Prasanth.K