''நடிகர் விஜய் கூறுவது சரிதான் ''- டிடிவி. தினகரன்

செவ்வாய், 20 ஜூன் 2023 (20:31 IST)
ஓட்டிற்குப் பணம் வாங்கக்கூடாது என்று நடிகர் விஜய்  கூறுவது சரிதான் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர் கடந்த சனிக்கிழமை அன்று விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து 234  தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கி, விருந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  நடிகர் விஜய்  மாணவர்களிடம் பேசிய பேச்சு தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதில், ‘’மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டிற்குப் பணம் பெற கூடாது என்று கூற வேண்டும் . அம்பேத்கார், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் பற்றி வாசிக்கக வேண்டும் ‘’என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்,  அமமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளார் தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்   மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,  ‘’பிரபலமான ஒருவர் கூறும் நல்ல கருத்தை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  விஜய், ஓட்டிற்குப் பணம் வாங்கக்கூடாது என்று கூறுவது சரிதான்.   நடிகர்  விஜய் இந்த விசயத்தைக் கூறுவது  மக்களைச் சென்றடையும்’’ என்று கூறினர்.

மேலும், ‘’இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,.  மக்கள்தான் அவர்களை ஆதரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.  

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்