கரூரில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. சிக்குகிறாரா நிதி நிறுவன அதிபர்..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (10:18 IST)
கரூரில் ஏற்கனவே அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் சோதனை செய்தனர். 
 
அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கரூர் செங்குந்தபுரம் என்ற பகுதியில் உள்ள புகழ்பெற்ற நிதி நிறுவனம் மற்றும் கிரானைட் பேக்டரி ஆகிய இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
தொடர்ச்சியாக திமுக பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்