திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. ஆவணங்களை அள்ளி சென்றதாக தகவல்..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:45 IST)
திமுக பிரமுகர் சாமிநாதன் என்பவரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. 
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. 
 
இந்த சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில்  சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதனால்தான் சாமிநாதனை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்