செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

புதன், 2 ஆகஸ்ட் 2023 (15:29 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன் என்பது குறித்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தற்போது விளக்கம் அளித்து வருகிறது. 
 
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் வழக்கறிஞர் வாதம் முடிந்துவிட்டது. 
 
இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளின் வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் அவரை கைது செய்தோம் என்றும் அவர் வாதாடினார். 
 
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாலும் அமலாக்கத்துறை காவலில் அவர் இல்லை என்றும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம் செய்து உள்ளதும்
 
அமலாக்கத்துறை வாதம் முடிந்ததும் இந்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்