திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. செந்தில் பாலாஜி ஆதரவாளரா?

புதன், 2 ஆகஸ்ட் 2023 (17:15 IST)
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை நான் சோதனை செய்து வருகின்றனர்
 
அவருக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  திமுக பிரமுகர் சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.  
 
திண்டுக்கல்லில் உள்ள கொங்கு நகரில் நிதி நிறுவனம் மற்றும் பள்ளிக்கூடம்   சாமிநாதன் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தில் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் புள்ளி
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்