பொழுதுக்கும் நிற்க வேண்டாம்... ஊழியர்களுக்கு இனி இருக்கை!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:12 IST)
இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். 
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதனை மாற்றி அமைக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதன்படி இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். ஊழியர்களுக்கு இனி இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்