76 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த உலகப்போர் குண்டு! – ஜெர்மனியில் பரபரப்பு!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:20 IST)
ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் வீசப்பட்ட குண்டு 76 ஆண்டுகள் கழித்து வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1939 தொடங்கி 1945 வரை தொடர்ந்த உலகப்போர் வரலாற்றின் மிகப்பெரும் துயரமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாட்டின் மீது அமெரிக்க, இங்கிலாந்து படைகள் ஜெர்மனியின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.

உலகப்போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் ஜெர்மனியில் அங்காங்கே எப்போதாவது பூமிக்குள் புதைந்த இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிச் நகரில் ரயில்வே கட்டமைப்பு பணிகளுக்காக பூமியில் துளையிட்டபோது புதைந்து கிடந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் 4 பேர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்