எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!!

Senthil Velan

திங்கள், 1 ஏப்ரல் 2024 (17:56 IST)
தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது என்ன குறிப்பிட்டுள்ளார்.  கூடுதல் தகவல், இது மத்திய அரசின் புள்ளிவிவரம் என அவர் பதிவிட்டுள்ளார்.
 
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ALSO READ: பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! துணிவில்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணி..! எல்.முருகன் சாடல்...
 
இதனிடையே இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ.21000 கோடியை தாண்டியுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்