சூரியன் திசை மாறி சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயன புண்ணிய காலமாக கருதப்படுகின்றது. ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஞானநூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன.விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி மாதம் ஆகும்.
ஆகஸ்ட் 03 - (வெள்ளி) ஆடிப்பெருக்கு, ஆகஸ்ட் 05 - (ஞாயிறு) ஆடிக் கார்த்திகை, ஆகஸ்ட் 11 - (சனி) ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 13 - (திங்கள்) ஆடிப்பூரம், ஆகஸ்ட் 14 - (செவ்வாய்) நாக சதுர்த்தி, ஆகஸ்ட் 15 (புதன்) இந்திய சுதந்திர தினம், ஆகஸ்ட் 15 (புதன்) கருட பஞ்சமி, ஆகஸ்ட் 21 - (சென்னை) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம், ஆகஸ்ட் 22 (புதன்) பக்ரீத், ஆகஸ்ட் 24 (வெள்ளி) வரலட்சுமி விரதம், ஆகஸ்ட் 25 (சனி) ஓணம் பண்டிகை, ஆகஸ்ட் 26 (ஞாயிறு) ஆவணி அவிட்டம், ஆகஸ்ட் 27 (திங்கள்) காயத்ரி ஜபம், ஆகஸ்ட் 30 (வியாழன்) மகா சங்கடஹர சதுர்த்தி.