இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி “நான் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன். இதற்கு முன் பல தேர்தல்களில் அவரும் நானும் இணைந்து பணியாற்றியுள்ளோம். என் தந்தை கருணாநிதி நிற்கும் திருவாரூர் தொகுதியிலும் நான் தேர்தல் பணிகளை செய்துள்ளேன்” என பதிலளித்தார்.
மேலும், என்னை சேர்த்துக்கொண்டால் திமுக வலிமை அடையும். இல்லையெனில், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறாது. அந்த தொகுதிகளில் நான்காம் இடத்திற்கே திமுக செல்லும். அதன் பின்னரே என் பலன் ஸ்டாலினுக்கு தெரிய வரும்” என அவர் பேட்டியளித்துள்ளார்.